Sunday, December 26, 2010

The Kings of Mykonos

மாநிறமாய் இருப்பவர்களுக்கு கருப்பாய் இருப்பவர்களைப்பார்த்து லேசாய் உயர்வு மனப்பான்மை. வெள்ளையாய் இருப்பவர்களுக்கு இவர்கள் இருவரையும் பார்த்து உயர்வு மனப்பான்மை.


மெல்பர்ன் வந்தபோது நிறைய கறுப்பு முடி உடைய ஐரோப்பியர்களைப்பார்த்தேன்.  அப்போது அவர்கள் கோதுமை நிறம் வட இந்தியர்களை ஞாபகப்படுத்தியது. இங்கு கிரேக்கர்களும் இத்தாலியர்களும் பிரிட்டிஷாருக்குப்பிறகு குடியேறினர்.  ப்ரிட்டிஷாரை விட கொஞ்சம் நிறம் குறைவாக இருந்ததானால் கேலிக்கும் ஆளாகினர். Wog என்ற பதத்தில் கிண்டல் செய்யப்பட்டனர்.

இன்றும் ஆஸ்திரேலிய கிரேக்கர்களும் இத்தாலியர்களும் தங்களை Wog Boys என்று சொல்லிக்கொள்வதைப்பார்க்கலாம்.  கிரேக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதைக்காணலாம். திருமணமாகும் வரை பெற்றோருடன் இருப்பது, நிறைய உறவினர்கள் இருப்பது, உறவினர் தாம் நடத்தும் ஓட்டலில் உணவு சாப்பிட்டால் காசு வாங்கிக்கொள்ளாதது, லஞ்சம் போன்றவை.

The Wog Boy 2 இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் பார்த்தேன். அருமையான நகைச்சுவை படம். ஸ்டீவ்வுக்கு க்ரீஸில் வசிக்கும் அவன் பெரியப்பாவின் சொத்து கிடைக்கிறது. அதைப்பெற்றுக்கொள்ள தன் இத்தாலிய நண்பனுடன் க்ரீஸ் செல்கிறான். அதை தடுத்து தான் எடுத்துக்கொள்ள ஒரு உறவினர் முயல்கிறான். கிடைத்ததா இல்லையா இது தான் கதை.

தொண்ணூற்றி ஏழு நிமிடங்கள் முழுவதும் நகைச்சுவை. அழகான கிரேக்கத்தீவுகள் கண்கொள்ளாக்காட்சிகள். You Tube Trailor பாருங்கள்.

11 comments:

Unknown said...

டோரண்ட் கிடைத்தால் பார்க்கிறேன்.

கோபிநாத் said...

முகிலனுக்கு ஒரு ரீப்பிட்டே ;)

புதுகை.அப்துல்லா said...

கோபிநாத் அண்ணனுக்கு ஒரு ரிப்பீட்டு.

சென்ஷி said...

புதுகை அண்ணனுக்கு ஒரு ரிப்பீட்டு.. டொரண்ட் கிடைச்சிடுச்சு :)

நசரேயன் said...

சென்ஷிக்கு ரிப்பீட்டு..

பழமைபேசி said...

தளபதி நசரேயனுக்கு மறுகூவு!

ராமலக்ஷ்மி said...

இதென்ன எல்லோரும் மாறி மாறிக் கூவுறாங்க:))!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மிணி:)!

Porkodi (பொற்கொடி) said...

chinna ammini, enna idhu pudhu blog?! or are you a different chinna ammini? :-|

Unknown said...

வாருங்கள் சின்ன அம்மணி அக்கா
மிக பிரபல பதிவரை மீண்டும் பதிவில் சந்தித்ததில் சந்தோசம்
உங்கள் விசிறிகளில் ஒரு வாசகன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஏன் ரெம்ப நாளா போஸ்ட் ஒன்னும் போடலை போல இருக்கே... ரெம்ப பிஸியா இருக்கீங்களோ...???....;)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html

Post a Comment