மாநிறமாய் இருப்பவர்களுக்கு கருப்பாய் இருப்பவர்களைப்பார்த்து லேசாய் உயர்வு மனப்பான்மை. வெள்ளையாய் இருப்பவர்களுக்கு இவர்கள் இருவரையும் பார்த்து உயர்வு மனப்பான்மை.
மெல்பர்ன் வந்தபோது நிறைய கறுப்பு முடி உடைய ஐரோப்பியர்களைப்பார்த்தேன். அப்போது அவர்கள் கோதுமை நிறம் வட இந்தியர்களை ஞாபகப்படுத்தியது. இங்கு கிரேக்கர்களும் இத்தாலியர்களும் பிரிட்டிஷாருக்குப்பிறகு குடியேறினர். ப்ரிட்டிஷாரை விட கொஞ்சம் நிறம் குறைவாக இருந்ததானால் கேலிக்கும் ஆளாகினர். Wog என்ற பதத்தில் கிண்டல் செய்யப்பட்டனர்.
இன்றும் ஆஸ்திரேலிய கிரேக்கர்களும் இத்தாலியர்களும் தங்களை Wog Boys என்று சொல்லிக்கொள்வதைப்பார்க்கலாம். கிரேக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதைக்காணலாம். திருமணமாகும் வரை பெற்றோருடன் இருப்பது, நிறைய உறவினர்கள் இருப்பது, உறவினர் தாம் நடத்தும் ஓட்டலில் உணவு சாப்பிட்டால் காசு வாங்கிக்கொள்ளாதது, லஞ்சம் போன்றவை.
The Wog Boy 2 இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் பார்த்தேன். அருமையான நகைச்சுவை படம். ஸ்டீவ்வுக்கு க்ரீஸில் வசிக்கும் அவன் பெரியப்பாவின் சொத்து கிடைக்கிறது. அதைப்பெற்றுக்கொள்ள தன் இத்தாலிய நண்பனுடன் க்ரீஸ் செல்கிறான். அதை தடுத்து தான் எடுத்துக்கொள்ள ஒரு உறவினர் முயல்கிறான். கிடைத்ததா இல்லையா இது தான் கதை.
தொண்ணூற்றி ஏழு நிமிடங்கள் முழுவதும் நகைச்சுவை. அழகான கிரேக்கத்தீவுகள் கண்கொள்ளாக்காட்சிகள். You Tube Trailor பாருங்கள்.
சின்ன அம்மிணி
Sunday, December 26, 2010
Thursday, November 18, 2010
என் முதல் பதிவு
இந்தியா போய் ஒண்ணரை மாதம் என்ன செய்தேன்?
நன்றாக சாப்பிட்டேன். தூங்கினேன். இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறேன். எர்ணாகுளம் போனது அருமையாக இருந்தது.
கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடம் கழித்து என் வகுப்புத்தோழியையும், ஜூனியரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தீபாவளி கூட்டத்தில் பேருந்தில் பயணம் செய்து எவ்வளவு நாட்களாகி விட்டது.
தீபாவளிக்கு மூன்று பட்டுப்புடவைகள் எடுத்தேன். திருமணத்தின்போது எடுத்தது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து பட்டுப்புடவை எடுத்திருக்கிறேன். ஸோ படிப்பவர்கள் நோ புகைச்சல். :)

Subscribe to:
Posts (Atom)